காலிஃப்ளவர் சில்லி




தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர்   500 grm
சோள மாவு 100 grm
சிகப்பு மிளகாய் தூள் தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு
சமையல் எண்ணெய் பொரிக்க தேவையான அளவு


செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பின்பு அதனை மிதமான சுடு தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய காலிஃப்ளவரை போட்டுக் கொள்ளவும் பின்பு கான்பிளவர் மாவு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது ஆகியவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பிணைந்து கொள்ளவும். இந்தக் கலவையை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி ஊறவைத்த காலிஃப்ளவரை சிறு சிறு பகுதிகளாக பொரித்துக் கொள்ளவும் மிதமான தீயில் நன்கு பொரித்து எடுக்கவும். சுவையான காலிபிளவர் சில்லி ரெடி.

Comments