தேவையான பொருட்கள்
🔹கத்தரிக்காய்
🔹சின்ன வெங்காயம்
🔹பூண்டு, கறிவேப்பிலை
🔹வெந்தயம், கடுகு
🔹மிளகாய்தூள், மஞ்சள்தூள்
🔹புளி, உப்பு
🔹சமையல் எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் கத்தரிக்காய் நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், பின்பு கத்தரிக்காய் உள் வைக்கும் மசாலா செய்ய தேவையான பொருட்கள் கொத்தமல்லி துள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு ஏற்ப மற்றும் புளி கரைசல் ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும், பின்பு நறுக்கிய கத்தரிக்காய் உள் வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் வெந்தயம் ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும் கத்தரிக்காய் இதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வாணலியை மூடி வைக்கவும், குறைவான தீயில் வேக வைக்கவும், இரண்டு நிமிடம் ஒரு முறை கிளறி விடவும், 20 நிமிடம் வேக வைத்து பிறகு சுவையான எண்ணெய் கத்தரிக்காய் ரெடி.
watch full video: YOUTUBE
Comments
Post a Comment
Thanks for support ❤