☄️நெத்திலி கருவாடு 100 கிராம்
☄️தக்காளி - 2
☄️பெரிய வெங்காயம் - 2
☄️மிளகாய்தூள் 2 டேபிள் ஸ்பூன்
☄️மஞ்சள் தூள் 1/2 டேபிள் ஸ்பூன்
☄️எண்ணெய் தேவையான அளவு
☄️கடுகு சிறிதளவு
☄️உப்பு தேவைக்கு ஏற்ப
முதலில் நெத்திலி கருவாடு அதன் தலை பகுதிகளை நீக்கி விடவேண்டும், பின்பு மிதமான சுடு தண்ணீரில் அதை ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின்பு இரண்டு அல்லது மூன்று முறை கழுவிய பிறகு சமைக்க வேண்டும்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும், இவை வணங்கியதும் கழுவி வைத்திருந்த நெத்திலி கருவாடு எடுத்து இதில் சேர்க்கவும் தேவையான அளவு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வாணலியை மூடி வைத்து விட வேண்டும், 20 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும், சுவையான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி இதை சூடான சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Full video soon :click here
Comments
Post a Comment
Thanks for support ❤