சமையல் டிப்ஸ்

1. முட்டைக்கோஸ் வருக்கும் போது சிறிதளவு பால் சேர்த்து வதக்கினால் பொரியல் வெள்ளை வெள்ளேர் என்று மல்லிகை பூ போல் காட்சியளிப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.

2. கத்தரிக்காயை வேக வைக்கும் போது அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிரை சேர்த்தால் கத்தரிக்காய் நிற மாறாமல் இருக்கும்.

3. எலுமிச்சம் பழத்தை தினமும் ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமல் கெட்டுப் போகாமல் இருக்கும்.

4. வீட்டில் அரைத்த தோசை மாவில் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து கரைத்து தோசை ஊற்றினால் ஹோட்டல் தோசை போல சுவையாக இருக்கும்.

5. ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது இரண்டு ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கலந்து ஊற்றினால் பாயாசம் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கம்.

6. ரவா தோசை மருளாக வரவேண்டும் என்றால் ரவையுடன் ஒரு பங்கு கோதுமை மாவு இரண்டு பங்கு அரிசி மாவும் சேர்த்து வார்க்கவும்.

7. கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு சேனைக்கிழங்கை அறிந்தால் அரிப்பு ஏற்படாது.

8. பாலித்தீன் கவரில் பச்சை தக்காளியுடன் ஒரு பழுத்த தற்காலியை போட்டு வைத்தால் எல்லா பழங்களும் படுத்து விடும்.

9. நீண்ட நாட்கள் நெய் கெட்டுப் போகாமல் இருக்க அதில் ஒரு துண்டு வெள்ளத்தை போட்டு வைக்கவும்.

10. சாம்பார் பொடி அரைக்கும் போது ஒரு கரண்டி கடுகு சேர்த்து அரைத்தால் பூச்சி வண்டு வராது.

Comments